Tuesday , September 29 2020
Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டிய தேவை இல்லை – அமைச்சர் தினேஷ் குணவர்தன

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்றும், தங்களுடன்  இணைந்துள்ள தமிழ்ப் பிரதிநிதிகளுடனேயே அது குறித்து பேசுவோம் என்றும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று கூறிக்கொண்டு பிரிவினைவாதம் பேசிக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைத் தமிழ் மக்களே நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் வாக்கு வீதத்திலும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என அவர்களால் கூறிக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்களுடன் எங்களுக்கு பேச வேண்டிய எந்தத் தேவையும் தங்களுக்கு கிடையாது என்றும், குறிப்பிட்ட தினேஷ் குணவர்த்தன, தற்போது அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இருக்கின்றனர் என்றும்அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியே  முக்கியம் என்றும், அதனைச் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாகவும், தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *