Wednesday , September 30 2020
Breaking News

முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலைக்கிடமான நிலையில்

முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக  புதுடில்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று, இராணுவ மருத்துவமனை நேற்றிரவு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவை அடுத்து, புதுடில்லி இராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதனால், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும, அவரது உடல் நிலை தொடர்ந்த மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக, டில்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியில் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது,

தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும், அவருக்கு ஏற்பட்ட ரத்த கசிவுக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த போதிலும், கொரோனா தொற்று காரணமாக பிரணாப்பின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *