Friday , September 25 2020
Breaking News

ஆளும் பாரதீய ஜனதா கட்சி  அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில், ஆளும் பாரதீய ஜனதா கட்சி  அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைத் தழுவியுள்ளது.

இதையடுத்து,  6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென பதவி விலகியுள்ளனர்.  இதையடுத்து அங்கு அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

மணிப்பூரில் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாரதீய ஜனதா கட்சியே, ஆட்சி அமைத்தது.

முதல்வராக பிரேன் சிங் பதவியேற்றார். இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்களும், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களும் பதவி விலகுவதாக  அறிவித்தனர்.

இதனால் பாரதீய ஜனதா கட்சி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என கூறி காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

இதில் நடந்த குரல் வாக்கெடுப்பில் பாரதீய ஜனதா கட்சி அரசு வெற்றி பெற்றது.

இந்நிலையில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென பதவி விலகியுள்ளனர்.

இதனால் அங்கு அரசியல் குழப்பம் மேலும் தீவிரமடைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *