Tuesday , September 29 2020
Breaking News

லங்கா பிரிமீயர் லீக் போட்டித் தொடர், நவம்பருக்கு ஒத்திவைப்பு.

எதிர்வரும் 28-ஆம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த லங்கா பிரிமீயர் லீக் போட்டித் தொடர், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை  டி20 லீக் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது.

வரும் 28-ந் திகதி லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் இந்தப் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஐந்து அணிகள் 23 ஆட்டங்களில் விளையாடும் எனவும், தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ள, யாழ்ப்பாணம் நகரங்களை கொண்ட அணிகள் அறிவிக்கப்பட்டன.

இதற்கான போட்டி அட்டவணைகளை தயார் செய்து கொண்டிருந்த நிலையில், வெளிநாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

வெளிநாட்டு வீர்ர்களை அனுமதிப்பதற்கான சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, இலங்கை கிரிக்கெட் சபை, சுகாதார அமைச்சுடன் பேச்சு நடத்தியது,

அப்போது வெளிநாட்டில் இருந்து வரும் வீரர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வரும் 28-ந் திகதி போட்டி ஆரம்பிக்கவுள்ள நிலையில் வீரர்கள் ஏலம், அணி அறிமுக விழா ஆகியவற்றுடன்,  வெளிநாட்டு வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதால், நவம்பர் மாதத்திற்கு தொடரை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *