Tuesday , September 29 2020
Breaking News

எக்காரணம் கொண்டும் இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்க அனுமதிக்க மாட்டோம் – றியர் அட்மிரல் சரத் வீரசேகர

எக்காரணம் கொண்டும் இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்க அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்துள்ளார், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள றியர் அட்மிரல் சரத் வீரசேகர.

இறுதிப் போரில், நாம் செய்யாத குற்றமொன்றை செய்ததாக கூறி, முன்னைய ஆட்சியாளர்கள்  ஜெனிவாவில் பொய்யான சாட்சியங்களை கொடுத்தனர் என்று குற்றம்சாட்டிய அவர், அதனை தம்மால் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா பிரேரணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் எந்தவொரு நாட்டுக்கும் இல்லை என்றும் கூறியுள்ள சரத் வீரசேகரஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவா பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலமாக வலுக்கட்டாயமான தலையீடுகள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றனர் என்றும், அவர்களின் ஆட்சி தொடர்ந்திருந்தால் இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்க முடியாது என்றும் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் நிலைமையே உருவாகியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பெளத்த நாட்டில் பெளத்த சிங்களத்தை அழிப்பதை எம்மால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இன்று நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம், அதிகாரங்கள் எமக்கு கிடைத்துள்ளது.

இப்போது சிங்கள பெளத்த கொள்கையையும்எமது இரானுவத்தையும் பாதுகாக்க எல்லா  நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்என்றும் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *