Monday , September 28 2020
Breaking News

ரெலோ அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வரும் செய்திகளை தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நிராகரித்துள்ளார்.

ரெலோ அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வெளியாகி வரும் செய்திகளை, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நிராகரித்துள்ளார்.

இது குறித்து செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிடுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் தமது சம்மதம் இன்றி வழங்கப்பட்டுள்ளது எனது உண்மையே என்றாலும்,  அதற்காக கூட்டமைப்பை பிளவுபடுத்த காரணமாக இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தம்மை பகடையாக வைத்து, தமிழ் அரசுக் கட்சியின் தலைவரை பிரிக்கலாம் என்றும், கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பக்கம் செல்வார்கள் என்றும் தவறான எண்ணத்தில் சிலர் இவ்வாறான செய்திகளை பரப்பி வருவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

ரெலோ, தமிழர்களின் இருப்பிற்கும் விடிவுக்காகவும் செயற்படும் அதேவேளை, தற்போது போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மேலும் பலமாக பயணிக்கும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *