Tuesday , September 29 2020
Breaking News

அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கான உறுப்பினர் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில்லை

அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கான உறுப்பினர் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கைப்பற்றுவதில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் அதுரலியே ரத்தன தேரருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வந்தது.

இந்த நிலையில் அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் என்று கூறி, வெடினிகம விமல திஸ்ஸ தேரர், தனது பெயரையே தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனத்துக்காக சமர்ப்பித்திருந்தார்.

எனினும்விமல திஸ்ஸ தேரரை கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகவும், புதிய செயலாளராக நிசாந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும். அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளரான நிசாந்த ரத்நாயக்கவின் கையெழுத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், அபே ஜன பல கட்சியின் தலைவரான சமன் பேரேராவை, தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு நியமிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.

அதேவேளை, அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் வெடினிகம விமல திஸ்ஸ தேரர், தலைமறைவாகியிருப்பதாகவும், உயிருக்குப் பயந்து ஒளிந்து திரிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, அபேஜன பல கட்சி தொடர்பான சட்ட ரீதியான சிக்கல்கள் தீரும் வகை அந்தக் கட்சிக்குரிய தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *