Monday , September 28 2020
Breaking News

தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு பொதுத் தேர்தலில் கிடைத்த 7 ஆசனங்களை நிரப்புவதில் பங்காளிக் கட்சிகளுடன் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளில் கணிசமானவை தமிழ், முஸ்லிம் கட்சிகளால் கிடைத்தவை.

எனினும், தேசியப் பட்டியலில் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு இடமளிக்கப்படவில்லை.

இதனால் தாங்கள் தனித்து இயங்கும் நிலை ஏற்படும் என்று மனோ கணேசன், தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன கூறியிருந்தன.

இதனால் பலத்த இழுபறிகள் தோன்றியிருந்த நிலையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சிறுபான்மைக் கட்சிகளுக்கு இடமளிக்கப்படாமலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னான்டோ, எரான் விக்ரமரத்ன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மயந்த திசநாயக்க, தயானி கமகே ஆகியோர் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்காக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த முடிவு தொடர்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகளிடம் இருந்து இதுவரை எந்தக் கருத்தும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *