Monday , September 28 2020
Breaking News

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களைத் தரையிறக்குவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களைத் தரையிறக்குவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

மலை மீது அமைந்துள்ள கோழிக்கோழி விமான நிலையம், ஆபத்தான டேபிள் ரொப் ஓடுபாதையைக் கொண்டது.

கடந்த 7 ஆம் திகதி கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது, விபத்துக்குள்ளாகியதில், 18 பேர் உயிரிழந்தனர்.

ஓடுபாதையைக் கடந்து குழிக்குள் விழுந்த விமானம் இரண்டாக உடைந்திருந்த்து.

எனினும், விமானம் தீப்பிடிக்காததால்பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

இந்த நிலையிலேயே, கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதித்து சிவில் விமான போக்குவரத்து துறை பணியகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மழைக்காலங்களில் மிகப்பெரிய உடல் அமைப்பு கொண்ட விமானங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *