Wednesday , September 30 2020
Breaking News

வெள்ளை மாளிகைக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி டிரம்ப் உடனடியாக வெளியேறிச் சென்றுள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து,  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து உடனடியாக வெளியேறிச் சென்றுள்ளார்.

வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித் திரிந்த ஒருவர் மீது இரகசிய சேவை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டிரம்ப், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதும் பாதியில் அங்கிருந்து வெளியேறினார்.

சிறிது நேரம் கழித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஒரு நபரை தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களுடன் வந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும்,. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *