Saturday , September 26 2020
Breaking News

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக, ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவிப்பு

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக, ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ள போதும், தடுப்பூசியின் கண்டுபிடிக்கப்பட்டதன் உண்மைத்தன்மை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்  வல்லரசு நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தடுப்பூசியை முதலில் யார் கண்டுபிடிப்பது என்பது தொடர்பாக,ஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.

அதேவேளை, கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசி 3 கட்ட மனித சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், 3 ஆம் கட்ட பரிசோதனை குறைந்தது 1 மாதங்களுக்கு மேலான பரிசோதனையாக இருக்க வேண்டும் எனவும் 1,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன் செயல்திறன் தொடர்பாக முழுமையான வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது.

 இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியிருந்த ரஷ்யா, உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாகவும், இந்த தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு விட்டது என்றும்,இது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாகவும், ரஷ்ய ஜனாதிபதி புடின் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

ஷ்ய பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஹமலியா ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புதினின் அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி கண்டுபிடிப்பின் இறுதிகட்டமான 3-ம் கட்ட பரிசோதனைகளை முழுமையாக நிறைவு செய்யாமல், தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்தது நாங்கள் தான் என கூறவே, அவசர அவசரமாக ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *