Saturday , September 26 2020
Breaking News

தேசிய பட்டியல் விவகாரத்தால், ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க விரும்பவில்லை – மனோ கணேசன்

தேசிய பட்டியல் விவகாரத்தால், ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க விரும்பவில்லை என்றும், இது தொடர்பாக சஜித் பிரேமதாச எடுக்கும் தீர்மானத்துக்கு இணங்குவதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு கருத்து வெளியிட்ட மனோ கணேசன், “ஐக்கிய மக்கள் சக்தியை நாமே உருவாக்கினோம். அந்தக் கூட்டணியோடு நாம் நீண்டத் தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதனால் சில விடயங்களை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.

தேசிய பட்டியல் விவகாரத்தால் எமது பிரதான நோக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்த இடமளிக்கமாட்டோம். ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சி இப்போது இல்லை. ஐக்கிய தேசிய கட்சியினரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவார்கள். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கூட்டணியினருக்கு தமிழர்கள் அல்லாத முஸ்லிம்கள், சிங்களவர்களும் வாக்களித்திருக்கிறார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பிரதான கூட்டணிக் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியே ஆகும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெறும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையே பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *