Tuesday , September 29 2020
Breaking News

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருப்பதற்கு எந்த தடைகளும் இல்லை – சட்டத்தரணி மனோகர டி சில்வா

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருப்பதற்கு சட்ட ரீதியான எந்த தடைகளும் இல்லை என்று அரசியலமைப்பு விவகார நிபுணராக சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உள்ள நிலையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு அமைய அவர் இந்தப் பதவியை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன.

எனினும் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசியலமைப்பு விவகார நிபுணராக சட்டத்தரணி மனோகர டி சில்வா, பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தமது வசம் வைத்திருப்பதற்கு சட்டரீதியான எந்த தடைகளும் இல்லை என்று கூறியுள்ளார். பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதி பயன்படுத்தலாம் என்று அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியே அமைச்சரவைக்கும் தலைமை தாங்குகிறார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வைத்திருக்க முடியாது என்று கூறுவது முட்டாள்தனமானது என்றும் சட்டத்தரணி மனோகர டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *