Saturday , September 26 2020
Breaking News

துறைசார் நிபுணர்கள் அமைப்பான வியத்மகவைச் சேர்ந்த நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட துறைசார் நிபுணர்கள் அமைப்பான வியத்மகவைச் சேர்ந்த நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று நடந்த அமைச்சர்கள் நியமனத்தின் போதே, வியத்மக அமைப்பின் உறுப்பினர்கள் நான்கு பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், வியத்தம அமைப்பின் ஒன்பது உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியலில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் எட்டுப் பேர், இம்முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில், றியர் அட்மிரல் சரத் வீரசேகர, கலாநிதி நாலக கொடஹேவ, கலாநிதி சீதா அரம்பேபொல, சன்ன ஜெயசுமண ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வியத்மக அமைப்பைச் சேர்ந்த நாலக பண்டார கொடேகொட மத்தறை மாவட்டத்துக்கும், உபுல் கலப்பதி அம்பாந்தோட்டை மாவட்டத்துக்குமான ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான குணபால ரத்னசேகர, கயசன் நாவானந்த, திலக் ராஜபக்ச ஆகிய மூவருக்கு மாத்திரம் புதிய அரசாங்கத்தில் எந்தப் பதவிகளும் வழங்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *