Monday , September 28 2020
Breaking News

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடம்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூளையில் ரத்த கட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

84 வயதுடைய, முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 10ம் திகதி, டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடந்த பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், அவரது மூளையில், ரத்தக்கட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறார்.

அவரது உடல்நிலையில், எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும், தற்போதும் ஆபத்தான நிலையிலேயே இருப்பதாகவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து, அவரது மகளும், காங்., மூத்த தலைவருமான ஷர்மிஸ்தா முகர்ஜி, ‘டுவிட்டர்வலைதளத்தில், நேற்று பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதிவில், என் தந்தைக்கு எது சிறந்ததோ, அதை கடவுள் அளிப்பதுடன், வாழ்க்கையின் சந்தோஷங்களையும், துக்கங்களையும், சமநிலையுடன் ஏற்கும் பலத்தை எனக்கு அளிக்கட்டும். என் தந்தைக்காக கவலைப்படும் அனைவருக்கும் நன்றி.என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *