Saturday , September 26 2020
Breaking News

வடபகுதியில் இளைஞர்களையும் எதிர்கால சமுதாயத்தையும் அழிக்கும் போதைப் பொருள் பாவனை

போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் பகுதிகளில் இருக்கின்ற இளைஞர்களை புதிதாக பாவனைக்கு உட்படுத்துவதன் மூலம் அவர்களை அடிமையாக்கி பின்னாளில் அவர்கள் தொடர்ந்தும் போதைப்பொருளை வாங்கும் வாடிக்கையாளராக மாற்றுகிறார்கள்.பெற்றோர்களின் தொடர் கண்காணிப்பும் கவனமும் தேவை பிற இடம் ஒன்றிற்கு புதிதாக செல்லுகின்ற போது அங்கே ஏற்படுகின்ற திடீர் நட்பின் நிமிர்த்தம் போதைப்பொருளை பாவிக்கும் நிலை ஏற்படுகின்றது. ஒரு தடவை பாவித்ததன் விளைவாக அவர்கள் தொடர்ச்சியாக பாவிக்கும் நிலை ஏற்படுத்தப்படுகின்றது.புதிய இடம் ஒன்றிற்கு வேலைக்காக அனுப்புகின்ற சமயம் கூடிய ஆலோசனையும் தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை.

ஒரு சமயம் மது அருந்திய பின்னர் தனக்கு வழங்கப்பட்ட போதைப்பொருளை பாவித்ததன் காரணமாக தொடர்ச்சியாக தான் போதைப்பொருள் பாவிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டதாக ஒருவர் கூறினார்.போதைப்பொருள் விற்பனையாளர்கள் பாடசாலைக்கு பணம் கொண்டு வரும் மாணவர்களை அணுகி அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்ய முயற்சிப்பார்கள். சில பெற்றோர் மாணவர்களுக்கு பாடசாலைக்கு செல்லும்போது அவர்களிடம் சிற்றுண்டி மற்றும் இதர தேவைக்காக வழங்குகின்ற பணத்தின் அளவை சரியான முறையில் கண்காணிப்பதில்லை. கையில் மேலதிகமாக இருக்கின்ற பணத்தில் மாணவன் இலகுவாக போதைப் பொருளை வாங்க தூண்டப்படுகின்றான்.

சில நாட்களின் பின்னர் முழுமையாக அடிமையாகிய பின்னர் பெற்றோருக்கு தெரியவரும் சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் பணத்தை தர மாட்டேன் என்று கூறும் சந்தர்ப்பங்களில் பெற்றோரிடமிருந்து பணத்தை பறித்து செல்லும் நிலை ஏற்படும். ஆகவே பெற்றோர்கள் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி பாடசாலையில் உண்பதற்கு சிறிய உணவு பொதியை அனுப்பி வைப்பது மிகவும் நல்ல செயற்பாடு. அவ்வாறு வழங்க முடியாத சந்தர்ப்பத்தில் அவருக்காக வழங்கப்படுகின்ற பணத்தின் அளவை சரியாக கண்காணித்து அன்று மாலையே அவர் செலவழித்த பணத்தின் தொகையை பற்றி தினசரி.கேட்க வேண்டும்.

குறிப்பு : இந்த பதிவானது யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களால் அவரது முகநூலில் பதிவேற்ற பட்ட பதிவின் பிரதியாகும் .

மூலப்பிரதி : https://bit.ly/3kCId0h

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *