Thursday , September 24 2020
Breaking News

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் – வி.பி.துரைசாமி

தமிழகத்தில் பாதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்று, அந்தக் கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் நேற்று பாதீய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்தமிழகத்தில் பாதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும்.என்று குறிப்பிட்டார்.

மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாதீய ஜனதா கட்சி தலைமையில்தான் கூட்டணிக் கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என்றும், தமிழகத்தில் திமுக எதிர் அதிமுக என இருந்த நிலை, இப்போது திமுக எதிர்  பாதீய ஜனதா கட்சி என மாறி உள்ளது என்றும் அவர் கூறினார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே பாதீய ஜனதா கட்சி போட்டியிட்ட நிலையில் வி.பி.துரைசாமியின் இந்தக கருத்து தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *