Monday , September 28 2020
Breaking News

இந்தியாவின் சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது

இந்தியாவின் சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் மட்டும் 15 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றுகிறார்கள்.

சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றவுள்ளார்.

சுதந்திர தின விழாவை யொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தலைநகர் டெல்லியில் விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 1 லட்சம் பொலிசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர தின விழாவை யொட்டி சென்னையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 3 மேலதிக ஆணையர்கள் தலைமையில் 15 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாகன சோதனை நடத்தப்படுவதோடு, விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *