Wednesday , September 30 2020
Breaking News

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பாதிப்பு, 6 வாரங்களில் இரண்டு மடங்காக அதிகரிப்பு

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பாதிப்பு, 6 வாரங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சீனாவின் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில், முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

அதற்குப் பின்னர், கிட்டத்தட்ட 8 மாத காலத்தில் உலகின் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதுவரை உலக அளவில் மொத்தம் 2 கோடி 3 லட்சத்து 18 ஆயிரத்து 226 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

கொரோனா கடந்த ஆண்டு டிசம்பரில் உகானில் தோன்றி வெளிப்பட்ட 6 மாதங்களில் உலகமெங்கும் 1 கோடி பேருக்கு பரவியது.

அதன் பின்னர், கடந்த 6 வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.

இவர்களில் 40 சதவீதத்தினர் அறிகுறிகள் ஏதுமின்றி கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் ஆவர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களில், மூன்றில் இரு பங்கினர் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *