Saturday , September 26 2020
Breaking News

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவி மற்றும் மசகு எண்ணெய் உதவிகளை நிறுத்திக் கொள்வதாக  சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவி மற்றும் மசகு எண்ணெய் உதவிகளை நிறுத்திக் கொள்வதாக  சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான  நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டு அரசுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

பாகிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட 6.2 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்த சலுகையில் 3 பில்லியன் டொலர் கடனுதவியாகவும், 3.2 பில்லியன் டொலர் அளவிற்கு மசகு எண்ணெய் கடனாகவும் வழங்கவும் சவுதி ஒப்புதல் அளித்தது.

இந்த சலுகை மூலம் சவுதியில் இருந்து இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிற்கு பாகிஸ்தான் கடனுதவி பெற்றுள்ளது.

இதற்கிடையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவை பெற அந்த அமைப்பின் கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது.

பாகிஸ்தானின் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்து வருகிறது.

மேலும், சவுதி தலைமையிலான அந்த கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி சவுதி

அரேபியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கருத்து தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக உள்ள இஸ்லாமிய நாடுகளுடன் கூட்டத்தை நடத்த பிரதமர் இம்ரான்கானுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன். என்று அவர் கூறியிருந்தார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியின் இந்த கருத்து சவுதி அரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில் இருந்ததால், சவுதி அரேபியா, பாகிஸ்தானுடனான உறவை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 6.2 பில்லியன் டொலர் கடனுதவியை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது.

இதன் மூலம் 3 பில்லியன் டொலர் அளவிலான கச்சா எண்ணெய் கடனுதவியும், 3.2 பில்லியன் டொலர் கடனுதவியும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள.

2018 ஆம் ஆண்டு அறிவிப்பின் ஒரு பகுதியாக 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த தொகையை உடனடியாக திரும்பித் தரும்படியும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சவுதி -பாகிஸ்தான் நட்பு முடிவுக்கு வந்துள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *