Friday , September 25 2020
Breaking News

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

மான்செஸ்டரில் கடந்த ஐந்தாம் திகதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் இன்று  தொடங்குகிறது.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி  களம் இறங்குகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் அந்த அணி களம் இறங்கும்.

முதல்வரிசை துடுப்பாட்ட வீர்ர்களாக ரோரி பேர்ன்ஸ், ரொம் சிப்லி, ஒல்லி போப், ஜோ ரூட் ஆகியோர் இருந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

கடந்த போட்டியில் கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் இல்லை என்றால் இங்கிலாந்து தோல்வியை சந்தித்திருக்கும். இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்கள்.

பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் உள்ளனர்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்டில் 90 ஓட்டங்களுக்கு மேல் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதனால் அவர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து செல்வதால் இரண்டு டெஸ்டிலும் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பு. அவருக்குப் பதிலாக ஒல்லி ராபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *