Tuesday , September 29 2020
Breaking News

கோமா நிலையில் பிரணாப் முகர்ஜி – இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என மகன் அறிவிப்பு.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்த சச்சின் பைலட்டும், நேரில் சந்தித்து  இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதை அடுத்து, மாநில அரசியலில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ.க்களுடன் போர்க்கொடி தூக்கி நெருக்கடி கொடுத்து வந்தார்.

இதனால் கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் அரசியலில் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் மாநில சட்டசபை கூட்டம் இன்று  தொடங்கவுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட் சந்தித்தார்.

அப்போது அசோக் கெலாட் உடன் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

சச்சின் பைலட் குறைகளை கேட்க பிரியங்கா காந்தி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  இதனால் சுமார் ஒரு மாதம் கழித்து சச்சின் பைலட், தமது ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் சொந்த மாநிலம் திரும்பினார்.

இந்தநிலையில் நேற்றுமாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் முதலமைச்சர் அசோக் கெலாட் வீட்டில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொண்டார். இதன்மூலம் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த இணக்கப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிவசேனா கட்சி, ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக மேற்கொண்ட ஒப்பரேசன் லோட்டஸ் நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *