Tuesday , September 29 2020
Breaking News

இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 3 பேர் கைது.

சட்டவிரோதமாக இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 3 பேரை தமிழகப் பொலி்சார் கைது செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மதுரை மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி ஊடகப் பயணம் மேற்கொண்ட இலங்கைத் தமிழ் அகதிகள் நான்கு பேரை பொலி்சார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர்களில் 3 பேர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அல்பேர்ட், கபிரியல் கிரீட் லோட்டஸ், கனகசபை ஆகிய அந்த மூவரும், இராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம்  இலங்கைக்கு செல்லவிருந்தனர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்களை மதுரை பொலிசார் தடுத்து வைத்து விசாரித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *