Monday , September 28 2020
Breaking News

லெபனானில் அவசரகால நிலை – இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கியது நாடாளுமன்றம்.

லெபனான் அரசு பதவி விலகியுள்ள நிலையில், பெய்ரூட்டில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இராணுவத்திற்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து, கடந்த 4-ம்திகதி வெடித்துச் சிதறியதில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

இந்த வெடிவிபத்தில் 3,0 இலட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

உலக வரலாற்றில் நடைபெற்ற மிக மோசமான வெடிவிபத்தாக இது அமைந்துள்ளது.

இந்த வெடிவிபத்தை அடுத்துஅ ரசாங்கத்துக்கு எதிர்ப்புத்  தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் லெபனான் அரசு பதவி விலக முடிவு செய்தது.

அதற்கு முன்னதாக அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்காக நேற்று  நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், அவசரகால நிலை மற்றும்  ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசாங்கம் பதவி விலகியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, பொதுமக்கள் கூடுவதை தடுக்க, ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு மீறல்களுக்காக பொதுமக்களை ராணுவ தீர்ப்பாயங்களுக்கு பரிந்துரைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *