Tuesday , September 29 2020
Breaking News

ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ரூனோவ், கொரோனா தொற்றால் பாதிப்பு.

ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ரூனோவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பிரதமர் மிகெய்ல் மிஷுஸ்டின்,  நாட்டின் கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில், ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ரூனோவ்வும்,  இணைந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

பயணம் மேற்கொள்ளும் முன்னதாக  துணை பிரதமர் யூரி ட்ரூனோவ்வுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  அறிவித்து ஓரிரு நாட்களுக்கு அவரது அரசின் துணைப் பிரதமர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *