Wednesday , September 30 2020
Breaking News

எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் – அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகே எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளதா அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகிக்கொண்டதில் இருந்து, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும்  இடையே பதற்றம் நிலவி வருகிறது.

மத்திய கிழக்கு பகுதியில், குறிப்பாக பாரசீக வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களை ஈரான் இலக்காக கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகே லைபீரிய கொடியுடன் பயணித்த எம்.வி.விலா என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் ஒரு ஹெலிகாப்டரில் வந்து கைப்பற்றியதாகவும், 5 மணி நேரம் தங்கள் பிடியில் வைத்திருந்து விட்டு விடுவித்து விட்டதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அதே நேரத்தில் அந்த எண்ணெய் கப்பலில் இருந்து எந்தவொரு  அவசர உதவி அழைப்பும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும் அந்த எண்ணெய் கப்பலை எதற்காக ஈரான் கைப்பற்றியது என்பது குறித்து அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தகவல் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *