Wednesday , September 30 2020
Breaking News

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்,  முதலாவது  நாள் ஆட்டம் நேற்று மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்,  முதலாவது  நாள் ஆட்டம் நேற்று மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி,  சவுதம்டனில் நேற்று தொடங்கியது.

இதில்,  முதலில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அணி முடிவு செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷான் மசூத் மற்றும் அபித் அலி  ஆகியோர், தொடக்கத்திலேயே அடித்து விளையாட தொடங்கினர். 

எனினும் மசூத் ஒரு ஓட்டத்துடன்  எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

அபித்துடன் இணைந்து விளையாடிய கப்டன் அசார் அலி 20 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆன்டர்சன் பந்து வீச்சில் பர்ன்சிடம் பிடி கொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். 

தொடர்ந்து பாபர் அசாம் 7 ஓட்டங்களுடனும்,  அபித் 49 ஓட்டங்களுடனும் விளையாடிக் கொண்டிருந்த பொழுது மழை குறுக்கிட்டது. 

இதனால் பாகிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில், ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

இங்கிலாந்தின் ஆன்டர்சன் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *