Friday , September 25 2020
Breaking News

இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகளின் போர்க்குற்றங்கள் – முழு விசாரணை நடத்துமாறு ஐ.நா

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையில் பங்கேற்ற பிரித்தானிய கூலிப்படைகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்த வேண்டும் என்று ஐ.நாவின் ஆறு நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1984 தொடக்கம் 1988 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரித்தானியாவின் தனியார் இராணுவ நிறுவனமான கீனி மீனி கூலிப்படைகள், இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்ததுடன், போர் நடவடிக்கைகளிலும் பங்கேற்றிருந்தனர். இந்தக் காலகட்டத்தில், இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு கீனி மீனி கூலிப்படைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானியாவின் பெருநகர பொலிசார் விசாரணைகளையும் தொடங்கியுள்ளனர். இந்த நிலையிலேயே இலங்கையில் போர் நடவடிக்கையில் பங்கேற்ற பிரித்தானிய கூலிப்படைகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்த வேண்டும் என்று ஐ.நாவின் ஆறு சிறப்பு அறிக்கையாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கையிடுமாறும் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் கோரியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தும் கடிதம் ஒன்று ஐ.நா நிபுணர்களால் இலங்கை அரசாங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *