Friday , September 25 2020
Breaking News

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்களைச் சேகரிக்கும் இராணுவத்தினர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள சில இடங்களில், வீடுகளுக்குச் சென்று இராணுவத்தினர் முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்களைச் சேகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர், வீடுகளில் இருந்த அனைவரது விபரங்களையும் பதிவு செய்துள்ளனர் என்று குடியிருப்பாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் எவரேனும், இருக்கின்றனரா என்ற விபரங்களையும் இராணுவத்தினர் சேகரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் போராளிகள் யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறும், குடியிருப்பாளர்களிடம் இராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். முன்னாள் போராளிகளின் விபரங்கள் எதற்காக சேகரிக்கப்படுகின்றன என அப்பகுதி மக்கள், இராணுவத்தினரிடம் கேட்ட போது அதுபற்றி எதுவும் கூற முடியாதும், தமக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்துள்ளதாக பதிலளித்தனர் என்றும் அங்குள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் பற்றிய தரவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்காகவே இராணுவத்தினரால் தகவல்களை திரட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள சூழலிலும், யாழ்ப்பாண படைகளின் கட்டளை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சேனாரத் பண்டார பொறுப்பேற்றுள்ள சூழலிலும், இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *