Friday , September 25 2020
Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக சுயாதீனமான குழு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக, சுயாதீனமான குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன திருகோணமலையில் நேற்று நடந்த தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில், தேர்தலில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், குறிப்பாக தமிழ் அரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்டவை குறித்து, கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போதே, உள்ளக மட்டத்தில் இதுபற்றி ஆராய்வது, கலந்துரையாடுவதை விட, சுயாதீன குழுவொன்றை நியமித்து, பின்னடைவுக்கான காரணங்களை கண்டறிவது பொருத்தம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், சுயாதீன குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த சுயாதீனக் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட ஒட்டு மொத்த பின்னடைவு குறித்து ஆராயுமா அல்லது தமிழ் அரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராயுமா என்பது பற்றிய தெளிவான தகவல் எதையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *