Saturday , September 26 2020
Breaking News

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் ரயில் பாதையைக் கடக்க முயன்றவர் ரயிலுடன் மோதி படுகாயம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில், அலைபேசியில் உரையாடிக் கொண்டு ரயில் பாதையைக் கடக்க முயன்றவர் ரயில் மோதி படுகாயமடைந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி, சங்கத்தானை ரயில்வே கடவையில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சங்கத்தானை பகுதியில் அலைபேசியில் உரையாடிக் கொண்டு, தண்டவாளத்தைக் கடந்து செல்ல முற்பட்டவர் மீது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் மோதியுள்ளது. கீழே விழுந்த அவர், தண்டவாளத்திலிருந்து வெளியேற முயன்ற போது அவரது கால் தண்டவாளத்தில் சிக்கியுள்ளது. இதனால் அவரது கால் துண்டிக்கப்பட்டதாகவும், உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த விபத்தில் சிக்கியவர், தென்பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *