Tuesday , September 29 2020
Breaking News

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியீடு

50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் விபரங்கள் இன்று அதிகாலையில் ஜனதிபதி செயலகத்தின் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்காக நிலுவையில் உள்ளவர்களின் பட்டிலும் மாவட்ட ரீதியாக தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடு சென்றது, மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறாத பட்டங்கள், வேறு வேலையில் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால், பட்டதாரிகள் பலர் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு 6 மாத கால பயிற்சி அளித்து அரச பணியில் உள்வாங்கும் திட்டம், செயற்படுத்தப்படவுள்ளது. இதில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை குறிப்பிட்ட பிரதேச செயலகங்களில் பதிவுகளை செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *