Saturday , September 26 2020
Breaking News

கடந்த வாரத்தில் செயற்பட்ட ஒழுங்குமுறைக்கு அமையவே, இன்று முதல் பாடசாலைகள் செயற்படும் – கல்வி அமைச்சு

அனைத்து பாடசாலைகளும் கடந்த வாரத்தில் செயற்பட்ட ஒழுங்குமுறைக்கு அமையவே, இன்று முதல் செயற்படும் என்று கல்வி அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் கூறுகின்றன. 200 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில், தரம், 11, தரம் 12, தரம் 13 தவிர ஏனைய மாணவர்களுக்கு சுழற்றி அடிப்படையிலேயே வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு உத்தரவிட்டிருந்த்து. இதற்கமைய கல்வி அமைச்சினால் வகுப்பு ரீதியாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒழுங்குமுறை ஒன்றும், வெளியிடப்பட்டது. எனினும், இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, வழமைபோல பாடசாலைகளை இயங்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக கடந்த வாரம் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனால், இன்று பாடசாலைகள் வழக்கம் போல செயற்படுமா என்ற குழப்பம், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோருக்கு இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் பாடசாலைகள் இயங்கிய ஒழுங்குமுறைக்கு அமையவே, இன்று முதல் செயற்படும் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2020 ஜூலை 28ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமையவே பாடசாலைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபத்தை மீறி செயற்பட வேண்டாம் என்று கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களைக் கோரியுள்ளது. அத்துடன், , கொரோனா தடுப்பு சுகாதார ஒழுங்குமுறைகளை உரியமுறையில் கடைப்பிடிக்குமாறும் கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களிடம் கோரியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *