Thursday , September 24 2020
Breaking News

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் – ரெலோ

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி, தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோருவதற்கு, பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திலேயே , கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை தருமாறு கோருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோவுக்கு 3 ஆசனங்களை கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்ற குழுவின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழக்கமாகும். ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் இம்முறை 4 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ரெலோவிற்கு வழங்க வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கோருவதென, ரெலோவின் தலைமைக் குழு தீர்மானித்துள்ளது.

2010 நாடாளுமன்ற தேர்தலை அடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரனுக்கும், 2015ம் தேர்தலை அடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரனுக்கும் பேச்சாளர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், சுழற்சி முறையில் இம்முறை தங்களுக்கு அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்று ரெலோ கோரியுள்ளதாகவும், செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *