Tuesday , September 29 2020
Breaking News

இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் – வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நேற்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கடமைகளைப் பொறுப்பேற்ற நிகழ்வில் உரையாற்றிய பொதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எமது வெளியுறவுக் கொள்கையில் வெவ்வேறு வழிகளை பின்பற்றியுள்ளோம். காலப்போக்கில் அது மாறிவிட்டது.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை 2019 காலகட்டத்திற்கு நெருக்கமாக எவ்வாறு கையாளப்பட்டது என்பதை நாம் அறிவோம். இப்போது எமது வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, சரியானதைச் செய்திருக்கிறோமா என்று பார்க்க வேண்டும்.

தேவையான திருத்தங்களை செய்யாவிட்டால் மற்றும் ஐந்து ஆண்டுகளில் நாட் அடைய விரும்பும் இடத்துக்கு செல்வதற்கு பத்து ஆண்டுகள் ஆகும். சுதந்திரம், இறைமை கொண்ட தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி நாடாகவே இலங்கை தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *