Wednesday , September 30 2020
Breaking News

எல்லா நாடுகளும் நட்புறவைப் பேணுகின்ற கொள்கையை இலங்கை பின்பற்றும் – தினேஸ் குணவர்த்தன

எல்லா நாடுகளும் நட்புறவைப் பேணுகின்ற கொள்கையை இலங்கை பின்பற்றும் என்று வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னரே, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா கல்யாண மித்ரவாகவே இருக்கும். மகிழ்ச்சியிலும் துன்பத்திலும், அணிசேராத, நடுநிலையான நட்புறவை பேணுவதே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கும்.

எங்களுக்கு எதிரிகள் இல்லை. நண்பர்களே உள்ளனர். உலகம் முழுவதும், இலங்கை அடைந்துள்ள மதிப்பை மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசாக, நாங்கள் அரசியலமைப்பை மீறும் தரப்பாக இருக்க மாட்டோம்.

எமது போர் வீரர்களைப் பாதுகாப்பதை கைவிட்டு விடமாட்டோம். எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக, நிலையான அபிவிருத்தி இலக்குகளைத் தொடருவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *