Monday , September 28 2020
Breaking News

பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து வாழ்த்துக் கூறிய அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ்

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நேற்று மாலை முதல் முறையாக பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ளார் அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ். இந்தச் சந்திப்பின் போது, பொருளாதாரம், வர்த்தகம், அரசாட்சி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில், இலங்கையுடன் மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்க விரும்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் இடம்பெற்றுள்ளதை வரவேற்றுள்ள அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், முன்னைய அரசாங்கம் நிராகரிக்கப்பட்டுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும், தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இந்தச் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கான நிலையங்களை அமைப்பதற்கும் அவர் அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ளார்.

சுத்தமான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும், அமெரிக்க தூதுவருடனான சந்திப்பின் போது பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார். கடந்த 5ஆம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அமெரிக்க தூதுவர் முதல் முறையாக பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *