Thursday , September 24 2020
Breaking News

கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தயார்

கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமில் புடின் கடந்தவாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இலங்கையின புதிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்று சந்தித்துப் பேசிய ரஷ்ய தூதுவர் யூரி பி மட்டேரி, தமது நாடு கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தடுப்பூசி பெறுவதற்கு ஆர்வம் இருந்தால், ரஷ்யாவில் உள்ள நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும், அவர் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை அரசாங்கம் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், ரஷ்யாவுக்கு இதுகுறித்துப் பதிலளிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *