Tuesday , September 29 2020
Breaking News

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இந்தியா தயார்

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மிகவும் நெருங்கிச் செயற்படத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தனவை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுக்காலை 11 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே, இந்தியாவின் அண்மைய நாட்டிற்கு முன்னுரிமை கொள்கையின் கீழ் இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் மிகவும் நெருங்கிச் செயற்படத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

நேற்றுமுன்தினம் வெளிவிவகாரஅமைச்சர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், உடனடியாகவே, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாங்லே அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இச்சந்திப்பின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் தினேஷ் குணவர்தனவிடம் கையளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *