Saturday , September 26 2020
Breaking News

நாடு முழுவதும் இரண்டு மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு மின்தடை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை அடுத்து, நாடு முழுவதும், இரண்டு மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு மின்தடை அமுல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுதல் அமுலுக்கு வந்துள்ள இந்த மின்தடை நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வார நாட்களில் பகலில், 1 மணித்தியாலம் 45 நிமிடங்களும், இரவில் மணித்தியாலமும், இந்த மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த மின்தடை, நாடு முழவதும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏ வலயத்தில் உள்ள இடங்களில், காலை 10 மணி தொடக்கம், 11.45 மணிவரை பகலிலும், மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை இரவிலும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படும். பி வலயத்தில், காலை 11.45 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரையும் இரவில்,7 மணி தொடக்கம் 8 மணி வரையிலும் மின்சாரம் தடை செய்யப்படும். சி வலயத்தில், பிற்பகல் 1.30 மணி தொடக்கம் 3.15 மணி வரைக்கும், இரவில், 8 மணி தொடக்கம் 9 மணி வரையிம் மின் தடை நடைமுறையில் இருக்கும். டி வலயத்தில் பிற்பகல் 3.15 தொடக்கம், மாலை 5 மணி வரையிலும், இரவில் 9 மணி தொடக்கம் 10 மணி வரையிலும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தை உள்ளடக்கிய சுன்னாகம் மின் விநியோக பகுதி, சி வலயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், நேற்றிரவு 9 மணி தொடக்கம் 10 மணிவரையில் யாழ்ப்பாணத்தில் மின் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *