Wednesday , September 30 2020
Breaking News

இரண்டு உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமையான நிலையில் கன்னி அமர்வு

ஒன்பதாவது நாடாளுமன்றம் நாளை முதல்முறையாக கூட்டப்படவுள்ள நிலையில், முதல் அமர்வில், இரண்டு உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமையாகவே இருக்கும் என்று நாடாளுன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அபு ஜனபல கட்சி ஆகியவற்றுக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்குரிய உறுப்பினர்கள் குறித்த விபரங்கள் இன்னமும் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை.

இதனால், குறித்த இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்குமாறு ஆசனங்கள வெறுமையாகவே இருக்கும் என்றும் நாடாளுன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் ஒருவர் கூட இல்லாமல் நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு முதல் முறையாக நாளை இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *