Wednesday , September 30 2020
Breaking News

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் செயற்படும்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் செயற்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்திய நிறுவனமும், உள்ளூர் நிறுவனமும் இணைந்து கட்டியுள்ளன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் மூலம் அடுத்த மாதம், மின்உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் தேசிய மின் வழங்கல் திட்டத்துக்கு 100 மெகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் என்றும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களிலேயே மன்னார் காற்றாலை மின்திட்டமே மிகப் பெரியது என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, தென்மராட்சி மறவன்புலவு பகுதியிலும், மற்றொரு காற்றாலை மின் திட்டம் கட்டப்படவுள்ளதாகவும் இதன் மூலம், தேசிய மின் விநியோக கட்டமைப்புக்கு 120 மெகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் என்றும், இலங்கை மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *