Saturday , September 26 2020
Breaking News

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்த்தனவை தெரிவு செய்ய தீர்மானம்

ஒன்பதாவது நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக, மகிந்த யாப்பா அபேவர்த்தனவை தெரிவு செய்வதற்கு ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் முன்மொழியப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் பதவிக்கு மகிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்மொழிந்துள்ளார். அதேவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை நியமிக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நாடாளுமன்றம் கூடும் போது, புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதி தலைவர் ஆகியோர் முறைப்படி தெரிவு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *