Monday , September 28 2020
Breaking News

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவிக்கப்படவில்லை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பில் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக நேற்று சாட்சியம் அளித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன, சஹ்ரான் காசிம் மற்றும் அவரது குழுவினரால் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பில் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தில் பணியாற்றிய பல்வேறு மிக முக்கிய பிரமுகர்களுக்கு இருந்த சில பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக அரச புலனாய்வுச் சேவைக்கு தொடர்ந்து தகவல்கள் கிடைத்த போதும், அவர்களில் பெரும்பாலோர் அந்த புலனாய்வுத் தகவல்களின்மீது கவனம் செலுத்தவில்லை என்றும், நிலந்த ஜயவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *