Tuesday , September 29 2020
Breaking News

19 அவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு 20 ஆவது திருத்தச்சட்டத்த கொண்டு வர அமைச்சரவையில் முடிவு

தகவல் உரிமைச் சட்டம், ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த 19 ஆவது திருத்தச்சட்டத்தின் சாதகமான விடயங்களில் மாற்றங்களைச் செய்வதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. புதிதாக பதவிக்கு வந்துள்ள அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றிருந்த்து. இந்தக் கூட்டத்தில், 19 அவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு, 20 ஆவது திருத்தச்சட்டத்த கொண்டு வருவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு திருத்த வரைவைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

எனினும், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் முழுமையாக நீக்கப்படாது என்றும், அதிலுள்ள சாதகமான விடயங்களில் மாற்றங்கள் செய்வதில்லை என்றும், அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தகவல் உரிமைச் சட்டம், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக வரையறுத்தல், ஜனாதிபதி ஒருவர் அதிகபட்சமாக இரண்டு தடவைகளே பதவியில் இருக்க முடியும் என்பன போன்ற 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள சாதகமான விடயங்கள் 20 ஆவது திருத்தச்சட்டத்திலும் உள்ளடக்கப்படும் என்றும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை, 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை தயாரிப்பதற்கு நீதியமைச்சர் அலி சப்ரியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அவர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னர், உள்ளடக்க வேண்டிய விடயங்கள் குறித்து அமைச்சர்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்த்த்தை மேற்கொள்வதற்கு எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர் உதய கம்மன்பில, கூடியவிரைவில் இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *