Saturday , September 26 2020
Breaking News

நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்

கிளிநொச்சி – கனகபுரம் டிப்போ வீதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். புதுமுறிப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த மூன்று இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். டிப்போ- கனகபுரம் வீதியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியின் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 18 வயதுடைய இர இளைஞர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞர்களில் ஒருவர், கிளிநொச்சி கோணாவில் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஞானகுமாரன் கிருசாந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சர்வநாதன் பவிக்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *