Wednesday , September 30 2020
Breaking News

20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைகளைத் தயாரிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிப்பு

20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைகளைத் தயாரிப்பதற்காக, ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ஒழித்து விட்டு, 20 ஆவது திருத்தத்தைக் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே, 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கான யோசனைகள் அடங்கிய வரைவை தயாரிப்பதற்கு ஐந்து அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உப-குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, 19 ஆவது திருத்தச் சட்டத்தை ஆராய்ந்து, 20 ஆவது திருத்தச் சட்டத்தில் இடம்பெறுவதற்கான புதிய யோசனைகளை முன்வைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *