Thursday , September 24 2020
Breaking News

காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்வதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவிப்பு

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்வதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை கடந்த ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி இந்திய மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளின்போது ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த தளங்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய கள நிலவரத்தை ஆய்வு செய்த பின் நிலைமை சுமூகமாக உள்ளதையடுத்து, கூடுதலாக குவிக்கப்பட்டுள்ள படைகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் வீரர்கள் அடங்கிய 100 கொம்பனி படையினரை விலக்கிக் கொள்ளவுள்ளதாக உள்துறை அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற் பாதுகாப்குபடையினர் உள்பட சுமார் 10 ஆயிரம் வீரர்களை விலக்கிக் கொள்ளும் நடைமுறை உடனடியாக அமுலுக்கு வர உள்ளது என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் பாதுகாப்பு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *