Friday , September 25 2020
Breaking News

தமிழகத்தின் 2-வது தலைநகரை அறிவிப்பது தொடர்பாக ஆளும் அதிமுக அமைச்சர்களிடையே மோதல் நிலை

தமிழகத்தின் 2-வது தலைநகரை அறிவிப்பது தொடர்பாக, ஆளும் அதிமுக அமைச்சர்களிடையே மோதல் நிலை தோன்றியுள்ளது. தமிழகத்தின் 2-வது தலைநகராக மதுரையை மாற்ற வேண்டும் என்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில், திருச்சியில் நேற்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அளித்த பேட்டியில், திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் கனவு என்றும், அதனையே நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் அனைத்து வளங்களும் உள்ளது. தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டாவது தலைநகரம் என்கிற கோரிக்கை எழுந்தால் திருச்சியைதான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார். இந்த விவகாரம் தமிழக அமைச்சரவைக்குள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *