Friday , September 25 2020
Breaking News

ராஜமலை பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன இரண்டு பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டதை அடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி தேயிலை தோட்டத்தில் கனமழையால் கடந்த 6ஆம் திகதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70 பேர் காணாமல் போயினர்.

நேற்று முன்தினம் மீட்கப்பட்ட மூன்று உடல்களுடன் சேர்த்து 61 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. நேற்றும் குடியிருப்பு புதையுண்ட இடத்தில் ரேடார் கருவி மூலம் ஆய்வு நடந்தது. அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் பெட்டிமுடி ஆற்றில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீயணைப்பு துறையினர் உட்பட பல்வேறு அமைப்பினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஆற்றில் இருந்து சிறுவன், பெண் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஏழு பேரின் உடல்கள் இன்னமும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *